சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியெங் செமினின் (Jiang Zemin) மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு நேற்று (02) பிற்பகல் நேரில் சென்ற ஜனாதிபதி, அங்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் விசேட குறிப்பொன்றை எழுதியதன் மூலம் முன்னாள் சீன ஜனாதிபதியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவிக்கும்போது, மறைந்த தலைவர் ஜியெங் செமின் சீன மக்கள் குடியரசிற்கு சிறந்தப் பங்களிப்பை வழங்கிய மிகச் சிறந்த தலைவர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.
President’s Media Division