மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருதுகள் வழங்கினார் ஜனாதிபதி முர்மு

புதுடில்லி: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (டிச.,03) வழங்கினார்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று(டிச.,03) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்தும் நோக்கில் பணியாற்றிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கும், மாற்று திறனாளி துறையில் சிறப்பாக செயலாற்றிய விருதுகளை வழங்கினார்.

latest tamil news

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் 14 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் மத்திய சமூக நீதி இணை அமைச்சர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.

latest tamil news

இந்த விருதுகளுக்காக 2021 ஆம் ஆண்டிற்கான மொத்தம் 844 விண்ணப்பங்களும், 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்கு என மொத்தம் 1210 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்து விருது பெறுபவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.