வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சமீபகாலமாக நடந்த வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பட்டுள்ளது. இதனை கண்ட உக்ரைன் தூதரக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், சமீப காலமாக நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. போர் காரணமாக பல்வேறு உயிர்கள் பலியாகி உள்ளன. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல உக்ரைன் நாட்டின் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் மாட்ரிட்டில் தூதரகத்திற்கு நேற்று விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் கிடைத்தது. ஆனால் அதில் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை. இதனையடுத்து மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்தை போலீசார் மோப்ப நாய்களுடன் அந்த பகுதியை தேட ஆரம்பித்தனர். இந்நிலையில், இந்த ரத்த பார்சல்கள் ரஷ்ய ராணுவ வீரர்களால் அனுப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து உக்ரைன் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விலங்குகளின் கண்கள் அடங்கிய ரத்த பார்சல்கள் பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், நேபிள்ஸ் மற்றும் கிராகோவில் உள்ள பொது தூதரகங்களுக்கும், ப்ர்னோவில் உள்ள தூதரகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை பலத்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement