மன்னார் முள்ளிக்குளம் காற்றாலை மின்சார மைய திட்டம் காலதாமதாகும்


மன்னாரில் உள்ள முள்ளிக்குளத்தில் இலங்கை மின்சார சபையினால்
நிர்மாணிக்கப்படவுள்ள உத்தேச 34-டேர்பைன் காற்றாலை மின்சார நிலையப் பணிகள்
தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு
அறிக்கையில், அந்தப் பகுதியின் வளமான பறவை இனங்கள் மற்றும் புலம்பெயர்
பறவையினங்கள் மீது, குறித்த மின்சார நிலையத் திட்டம், தாக்கத்தை
ஏற்படுத்துமா? என்பதை ஆராயுமாறு கோரப்பட்டுள்ளது. இதனையடுத்தே இந்த திட்டப்பணிகள் தாமதமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

83 பறவையினங்கள் இனங்கள் பாதிக்கப்படும்

மன்னார் முள்ளிக்குளம் காற்றாலை மின்சார மைய திட்டம் காலதாமதாகும் | Mannar Wind Power Project Delayed Impact Birds

காற்றாலைகளிலிருந்து எழும் இயங்கங்களால்,பறவைகள் மற்றும் வெளவால்கள்
போன்றவற்றுக்கு மரணம் மற்றும் காயங்களுக்கு வழிவகுக்கும் என்று அந்த அறிக்கை
சுட்டிக்காட்டியுள்ளது.

இந்ததிட்டம் காரணமாக 83 பறவையினங்கள் இனங்கள் பாதிக்கப்படும் என்று
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த திட்டம் தொடர்பான கள ஆய்வுகள் ஒரு குறுகிய காலத்திற்குள் மட்டுமே
மேற்கொள்ளப்பட்டன.
எனவே இதனை மையப்படுத்தி குறைந்தபட்சம் ஒரு வருட ஆய்வு நடத்தப்படவேண்டும் என்று
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த பறவைகள்

மன்னார் முள்ளிக்குளம் காற்றாலை மின்சார மைய திட்டம் காலதாமதாகும் | Mannar Wind Power Project Delayed Impact Birds

புலம் பெயர்ந்த பறவைகள் பல நுழைவுப் பாதைகள் வழியாக இலங்கையை அடைகின்றன.
மன்னார் பிராந்தியத்தில் ஒரு முக்கிய நுழைவுப் புள்ளி உள்ளது.

அதேபோல், பருவத்தின் முடிவில் நாட்டை விட்டு வெளியேறும் போதும் அந்த பறவைகள்,
மன்னார் பகுதியை தங்கள் கடைசி நிலைப் புள்ளியாகப் பயன்படுத்துகின்றன என்று
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.