திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த புக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி தனா என்கிற தனலட்சுமி (40). மனநிலை பாதிக்கப்பட்ட இவர் புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்யப்பட்டார்.
இது குறித்து விசாரணை நடத்திய உடுமலை போலீஸார், கொலை தொடர்பாக உடுமலை ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் ஆரோக்கியதாஸ் (31) என்பவரை கைதுசெய்துள்ளனர். பெயின்ட்டராக வேலை பார்த்து வந்த ஆரோக்கியதாஸுக்கு திருமணமாகி, அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக புக்குளம் பகுதியில் பெயின்ட்டிங் வேலை செய்து வந்திருக்கிறார்.

வேலை முடிந்து வந்தபோது, புக்குளம் பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்த தனலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அவர் தலையில் கல்லைப் போட்டு கொலைசெய்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கிலும், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ரயிலில் சங்கிலி பறித்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் ஆரோக்கியதாஸ் மீது இருக்கின்றன.
இது குறித்துப் பேசிய போலீஸார், “ஆரோக்கியதாஸ் பெண்கள் மீதான வெறுப்பால், சைக்கோ போல செயல்பட்டு வந்திருக்கிறார். பெண்கள் தனியாக இருந்தால் அவர்களை முதலில் சரமாரியாகத் தாக்குவதுடன், அவர்களிடம் உள்ள பணம், நகைகளைப் பறித்துக் கொண்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறான்” என்றனர்.