வெனிஸ், அமெரிக்காவின் சிறிய ரக விமானம் ஒன்று, நேற்று முன்தினம் மெக்ஸிகோ வளைகுடா கடலில் விழுந்தது. இதில் பயணித்த சிறுமி மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர். விமானத்தின் பைலட்டை தேடும் பணி நடக்கிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்தில் இருந்து, அதே மாகாணத்தில் உள்ள வெனிஸ் நகருக்கு சென்ற சிறிய ரக விமானம், மெக்ஸிகோ வளைகுடாவை கடக்கும்போது பழுது ஏற்பட்டு கடலில் விழுந்து மூழ்கியது.
இதில் பயணித்த சிறுமி மற்றும் ஒரு பெண் உடல் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
விமானத்தின் பைலட்டை தேடும் பணி நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement