திருமண உறவுக்கு துரோகம் செய்தால் சிறை தண்டனை: புதிய சட்டத்திற்கு இந்தோனேசியா ஒப்புதல்


இந்தோனேசியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் உடலுறவில் ஈடுபட தடை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டம் இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் ஒப்புதல்

இந்தோனேசியாவில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் திருமண உறவுக்கு வெளியே வேறு ஒரு நபருடன் உடலுறவு வைத்து  கொள்ள கூடாது என்று தடை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டத்திற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

இந்த புதிய சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்டால் அவர்களுக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண உறவுக்கு துரோகம் செய்தால் சிறை தண்டனை: புதிய சட்டத்திற்கு இந்தோனேசியா ஒப்புதல் | Indonesia Banning Sex Outside MarriageGetty 

இந்த புதிய சட்டமானது மூன்று ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நீதிமன்ற சவால்களை இந்த சட்டம் நிச்சயமாக எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ் திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொள்ளும்போது ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்றும், அத்துடன் அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது வெளிநாட்டவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமண உறவுக்கு துரோகம் செய்தால் சிறை தண்டனை: புதிய சட்டத்திற்கு இந்தோனேசியா ஒப்புதல் | Indonesia Banning Sex Outside MarriageReuters 

மக்கள் போராட்டம்

முஸ்லிம்கள் பெரும்பான்மையானவர்கள் உள்ள இந்த நாட்டில் மதப் பழமைவாதம் எழுச்சி பெற்ற பிறகு இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்து இருக்கும் மக்கள், இதனை மனித உரிமைகளுக்கான  “பேரழிவு” என்றும், சுற்றுலா மற்றும் முதலீட்டிற்கு சாத்தியமான அடி என்றும் கூறுகின்றனர்.

இந்த வாரம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே பல இளைஞர்கள் குழு, அரசின் புதிய திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருமண உறவுக்கு துரோகம் செய்தால் சிறை தண்டனை: புதிய சட்டத்திற்கு இந்தோனேசியா ஒப்புதல் | Indonesia Banning Sex Outside MarriageReuters 

கடந்த 2019 ஆண்டு இது போன்று முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி அதை தடுத்து நிறுத்தி இருந்த நிலையில், தற்போது செவ்வாயன்று 600 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் கொண்ட புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.