வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும்: கூகுள் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கடிதம்

புதுடெல்லி: வெளிநாடு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடித்ததில் பந்தய நிறுவனங்களில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாளப்படும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக கைவிடுமாறு ஒன்றிய அரசு அந்நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

அக்டோபர் 3 அன்று நடந்த கடைசி ஆலோசனைக்குப் பிறகு, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி (ஓவர்-தி-டாப்) பிளேயர்கள் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வெளிநாட்டு பந்தைய விளம்பரங்களைக் காட்டுவதை நிறுத்தினர். ஆனால், யுடியூப் மற்றும் கூகுள் இது போன்ற பல விளம்பரங்ககளை காட்டுவது எங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இதை உடனடியாக நிறுத்துமாறு கூகுள் நிறுவனத்தை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று ஒன்றிய அரசு கூகுளுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. ஆன்லைன் கேமிங்கிற்கான இந்தியாவின் கட்டுப்பாடு அனைத்து நிஜ பண விளையாட்டுகளுக்கும் பொருந்தும். மேலும் பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை மட்டும் ஒழுங்குபடுத்துங்கள் மற்றும் மற்ற விளையாட்டுகளை விட்டுவிடுங்கள் எனவும் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.