எனக்கு பயமாக இருக்கிறது.?வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்த இருவருக்கு ஜாமின்.!

தென் கொரியைச் சேர்ந்தவர் யூடியுபர் மியோச்சி. இவர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். மும்பைக்குச் சென்ற அவர், அங்கிருந்தபடியே லைவ் ஸ்டிரீம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்த இருவர், பைக்கில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர். இடுப்பிலும் தோளிலும் கைவைத்துள்ளனர். மேலும், மியோச்சியை முத்தமிடவும் முயன்றனர். இதையடுத்து மும்பை போலீசார் சம்மந்தப்பட்ட இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்து மும்பை சாலைகளில் ஏற்பட்ட அனுபவம் தொடர்பாக அந்த தென் கொரிய பெண் கூறுகையில், “நான் உலகின் பல நாடுகளுக்கும் சென்று வீடியோக்களை பதிவிட்டு வருகிறேன். ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், உணவு முறை குறித்து உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மும்பையில் ஹோட்டல் திரும்பிக் கொண்டிருந்த போது தான் இந்தச் சம்பவம் நடந்தது.

இருவரும் என்னைப் பார்த்து ஐ லவ் யூ எனச் சொல்லி தவறாக நடக்க முயன்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பல நாடுகளில் நடந்துள்ளன. மற்ற நாடுகளிலும் இதுபோன்ற சம்பவத்தை நான் எதிர்கொண்டிருக்கிறேன். மற்ற நாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால், அங்கு எனக்கு என்ன செய்வதென்றே தெரியாது. ஆனால், இங்குப் பல நண்பர்கள் எனக்கு உதவி செய்ய முன்வந்தனர்’’ என கூறினார்.

அதைத் தொடர்ந்து யூடியுபர் மியோச்சி, இந்த விவகாரத்தில் தனக்கு உதவிய இரு இளைஞர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். போலீஸ் நடவடிக்கைக்குக் காரணமாக இருந்த ஆதித்யா மற்றும் அதர்வா இருவரையும் நேரில் சந்தித்த மியோச்சி, அவர்களுடன் இரவு உணவு சாப்பிட்டார். இவர்கள் இருவரும் விரைந்து செயல்பட்டதில் மியோச்சிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? அமைச்சர் சிவசங்கர் பேட்டி!

இது குறித்து மியோச்சி தனது ட்விட்டரில், “ஒரு வழியாக இந்திய ஹீரோக்களை சந்தித்து விட்டேன். இவர்கள் தான் உண்மையான இந்திய ஜென்டில்மேன்கள்” என்று பதிவிட்டிருந்தார். யூடியுபர் மியோச்சி இது தொடர்பான வீடியோ மற்றும் ஃபோட்டோவை பதிவிட்டுள்ள நிலையில், இதற்கு நெட்டிசன்கள் பலரும் ஹார்ட்விட்டு வருகின்றனர். மேலும், அந்த இரு இளைஞர்களையும் பாராட்டினர்.

அண்ணல் அம்பேத்கருக்கு காவி சாயம் பூசிய இந்து முன்னணி!

இந்தநிலையில் வெளிநாட்டு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 19 மற்றும் 21 வயதான மொபீன் சந்த் மற்றும் முகமது சேக் ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்த நிலையில், அந்த இரண்டு பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அந்த தென் கொரிய பெண் கூறும்போது, ‘‘ இன்றைக்கு நேரலையில் வர எனக்கு பயமாக உள்ளது. நான் இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பேனா?’’ என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.