மகனின் புகைப்படத்தை பகிர்ந்து பிரித்தானிய பெற்றோரை எச்சரித்த தாயார்: அறிகுறிகளை கவனியுங்கள்!


தமது மகனின் நெஞ்சை உலுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தாயார் ஒருவர், Strep A தொற்று பாதிப்பின் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார்.

இதுவரை 9 சிறார்கள்

கடந்த ஒரு வாரமாக பிரித்தானியாவில் Strep A தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 9 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
ஏழு வயது ஹன்னா ரோப் உட்பட மரணமடைந்த கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் ஆரம்ப பள்ளி வயதுடையவர்கள் மட்டுமின்றி,

மகனின் புகைப்படத்தை பகிர்ந்து பிரித்தானிய பெற்றோரை எச்சரித்த தாயார்: அறிகுறிகளை கவனியுங்கள்! | Parents See How Fast Strep A Strikes

credit: amylaura36

சிறுமி ஹன்னா ரோப் லேசான இருமலுடன் காணப்பட்டவர், 24 மனி நேரத்தில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தமது 5 வயது மகளை மூன்று முறை மருத்துவரை காண்பித்த தந்தை ஒருவர், Strep A தொற்று காரணமாக தமது மகள் மரணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பல பெற்றோர்களும் தாமாகவே முன்வந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன், Strep A தொற்று தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயன்று வருகின்றனர்.

20 நிமிடங்களில் நிலை மோசமடைய

ஆமி என்பவர் தமது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து, தமது அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.
தூங்க சென்ற தமது மகன், சில மணி நேரத்தில் மூச்சுவிட முடியாமல் அவதிக்குள்ளானதாகவும், அடுத்த 20 நிமிடங்களில் நிலை மோசமடைய, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் அளவு சரிவடைந்ததுடன், இதயத்துடிப்பும் குறைந்துள்ளது. மூச்சுவிட முடியாமல் அவஸ்தைப்பட்ட தமது மகனுக்கு உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் அணிவிக்கப்பட்டது என்றார்.

மகனின் புகைப்படத்தை பகிர்ந்து பிரித்தானிய பெற்றோரை எச்சரித்த தாயார்: அறிகுறிகளை கவனியுங்கள்! | Parents See How Fast Strep A Strikes

credit: amylaura36

இந்த நிலையில், சிறுவன் ஸ்கார்லெட் காய்ச்சல், ஸ்ட்ரெப் ஏ மற்றும் நிமோனியா பாதிப்பால் அவதிப்படுவதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
உரிய நேரத்தில் தமது மகனை மருத்துவமனையில் சேர்ப்பித்ததால் பிழைத்துக் கொண்டதாகவும் ஆமி தெரிவித்துள்ளார்.

காய்ச்சலுடன் தொண்டை வலி இருக்கும், கழுத்தில் வீக்கம் தெரியும், ஆரம்ப அறிகுறிகளுக்குப் பிறகு 12-48 மணி நேரத்தில் உடலில் சொறி ஏற்படும் எனவும் நாக்கில் வெள்ளை நிறத்தில் பூஞ்சைகள் படரும் என சிறார்களுக்கு Strep A அறிகுறிகளை பட்டியலிடுகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.