பெர்லின்,-ஜெர்மனியில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டு அரசைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக எழுந்த சந்தேகத்தில், நாடு முழுதும் நேற்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வலதுசாரி கொள்கையுடைய அமைப்புடன் தொடர்புடைய, ௨௫ பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வலதுசாரி கொள்கையுடைய ‘ரீயிச் சிட்டிசன்ஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பு ஆயுதப் படையை உருவாக்கி, புரட்சியின் வாயிலாக தற்போதுள்ள அரசைக் கவிழ்க்க சதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, ஜெர்மனியின் ௧௬ மாகாணங்களில், ௧௧ல் நேற்று, ௩,௦௦௦க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், ௨௫ பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது.
இது குறித்து, ஜெர்மனி சட்ட அமைச்சர் மார்கோ புஷ்ச்மான் கூறியுள்ளதாவது:
இந்த அமைப்பு, ஹெயின்ரிச் என்பவர் தலைமையில், ரோட்ரிஜர் என்பவர் கண்காணிப்பில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் ஆயுதங்களை திரட்டி, நாட்டில் புரட்சி ஏற்படுத்தி தற்போதுள்ள அரசைக் கவிழ்க்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், இந்த அமைப்புடன் தொடர்புடைய, ௨௨ ஜெர்மானியர் உட்பட, ௨௫ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார்.
இதைத் தவிர, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் தலா ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் ஜெர்மனி அரசைக் கவிழ்க்க வெளிநாடுகளின் உதவியையும் கேட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களுடைய முயற்சிகள் பலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement