கத்தார் உலகக்கோப்பையில் இதுவரை சிறந்த வீரர் யார்? ஃபிபாவின் கேள்விக்கு ரசிகர்களின் பதில்


இதுவரை உலகக்கோப்பையில் சிறந்த யார் என்ற ஃபிபாவின் கேள்விக்கு ரசிகர்கள் பதில் அளித்துள்ளனர்.

ஆதரவை அள்ளிய பெப்பே

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் காலிறுதியை எட்டியுள்ளது.

நாளை நடக்கும் முதல் காலிறுதிப் போட்டியில் குரேஷியா-பிரேசில் அணிகளும், இரண்டாவது போட்டியில் நெதர்லாந்து-அர்ஜென்டினா அணிகளும் மோதுகின்றன.

இந்த நிலையில் ஃபிபா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை உலகக்கோப்பையில் சிறந்த வீரர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளது.

அதற்கு ரசிகர்களும் பதில் அளித்து வருகின்றனர்.

கய்லியன் பெப்பே/Kylian Mbappe

@Stu Forster/Getty Images

பெரும்பலமான ரசிகர்கள் கய்லியன் பெப்பே தான் சிறந்த வீரர் என தெரிவித்துள்ளனர்.

பெப்பே நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 கோல்கள் அடித்து, கத்தார் தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பெப்பேவுக்கு அடுத்த இடத்தில் லயோனல் மெஸ்ஸி இருக்கிறார்.

மெஸ்ஸி/Messi

ஹீரோவான கோல் கீப்பர்

யாரும் எதிர்பாராத விதமாக மொராக்கோ கோல் கீப்பர் எஸ்ஸின் பௌனோவுக்கு ரசிகர்களிடம் ஆதரவு குவிந்து வருகிறது.

ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில், அபாரமாக கோல்களை தடுத்து தமது அணியை வெற்றி பெற வைத்ததின் மூலம் பௌனோ போட்டி நாயகனாக உருவெடுத்தார்.

எஸ்ஸின் பௌனோ/Yassine Bounou

இன்னும் சில ரசிகர்கள் பிரேசில் நட்சத்திரம் நெய்மரை குறிப்பிட்டுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் ஒரு கோல் அடிக்க உதவியதுடன், அசத்தலாக கோல் அடித்தும் ரசிகர்களை ஈர்த்தார்.

ஏமாற்றும் ரொனால்டோ

ஆனால், ஆரம்பம் முதலே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ரொனால்டோ இதுவரை பெரிதளவில் சோபிக்கவில்லை. எனவே அவரை ரசிகர்கள் குறிப்பிடவில்லை.

ரொனால்டோ /Ronaldo

@Getty Images

மேலும் போர்த்துக்கலின் புருனோ, பிரான்ஸ் வீரர் கிரெய்ஸ்மனைக்கும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். 

கிரெய்ஸ்மன்/Griezmann

Planet Football



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.