குஜராத் தேர்தல்: 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் ஜடேஜாவின் மனைவி வெற்றி

ஜாம்நகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக. இந்நிலையில், அந்த கட்சியின் சார்பில் ஜாம்நகர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பலரது கவனத்தை ஈர்த்த வேட்பாளர்களில் ஒருவர் ரிவாபா ஜடேஜா. 1990ல் பிறந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹரி சிங் சோலங்கியின் நெருங்கிய உறவினர். இவர் கடந்த 2019ல் பாஜகவில் இணைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்த ரிவாபா ஜடேஜா, ஜாம் நகர் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் நோக்கில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை அங்கு ஏற்கனவே செய்யத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே, ஜாம் நகர் வடக்குத் தொகுதி அவருக்கு வழங்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெரும் நோக்கில் மிகத் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார். அதற்கு அவரது கணவர் ஜடேஜாவும் உதவினார். அவரும் பரப்புரையில் பங்கேற்றார்.

இந்நிலையில், அந்த தொகுதியில் ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 57.79 சதவீத வாக்குகளை ரிவாபா பெற்றிருந்தார். 88,835 வாக்குகளை அவர் பெற்றார். இதே தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை காட்டிலும் கூடுதலாக 53,570 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். வெற்றிக்கு பிறகு கணவருடன் இணைந்து வெற்றி பேரணி மேற்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.