பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் ஒரு முக்கியப்பிரச்சினை தான்.
முகப்பருக்கள் சில சமயங்களில் ஹார்மோன் மாற்றங்களாலும் வரும்.
இப்படி வரும் முகப்பருக்கள் தானாக மறைந்துவிடும்.
அதுவும் சீழ் நிறைந்த முகப்பருக்கள் இருந்தால், அதை கவனமாக கையாள வேண்டும்.
இல்லாவிட்டால் அதன் சீழ் முகத்தில் பரவி, நிறைய பருக்களை வரவழைத்து விடும்.
எனவே இதனை ஆரம்பத்திலே போக்குவது சிறந்நது. தற்போது அவை எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.
- 2% சாலிசிலிக் அமில ஜெல்லை, இரவு தூங்கும் முன் பிம்பிள் மீது அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்த, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இதனால் இந்த ஜெல் பரு உள்ள சீழை முற்றிலும் வற்றச் செய்து, தழும்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
- சிறிது பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, முகத்தை சுத்தம் செய்து, பின் தயாரித்த பேக்கிங் சோடா பேஸ்ட்டை பிம்பிள் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பருக்கள் தழும்புகளின்றி மறையும்.
- சில துளிகள் வெள்ளை வினிகரை பிம்பிள் மீது தடவ வேண்டும். ஆனால் வினிகரை தடவும் முன், முகத்தை நன்கு சுத்தம் செய்து உலர்த்தியிருக்க வேண்டும். பின் அந்த வினிகரை தடவி அப்படியே உலர்த்த விட வேண்டும். இப்படி செய்வதனால், அது பிம்பிளை குறைப்பதோடு, விரைவில் தழும்புகளின்றி பிம்பிள் மறையும்.
- முகத்தில் பிம்பிள் அதிகம் இருக்கும் போது, பென்சாயில் பெராக்சைடு கொண்ட க்ரீம், ஜெல் அல்லது டோனர் போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.