Same Sex Marriage: தன்பாலின திருமண மசோதாவில் அதிபர் ஜோ பிடன் எப்போது கையெழுத்திடுவார்?

வாஷிங்டன்: ஒரே பாலின மற்றும் கலப்புத் திருமணத்தைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. வியாழக்கிழமை (2022 டிசம்பர் 8) இந்த மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையொப்பம் இட்டால் இந்த மசோதா சட்டமாகிவிடும். இந்த செய்தியை சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்துக் கொள்வதற்கு அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பை வழங்குவதற்கான மசோதா இதுவாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு தன்பாலின திருமணம் செய்து கொள்வது அமெரிக்காவில் சட்டபூர்வமானது. அதற்கு முன்பு 36 மாகாணங்களில் மட்டுமே தன்பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அனுமதி இருந்தது. 

திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் (Respect for Marriage Act) என்பது, ஒரே பாலின திருமணங்கள் மற்றும் ஓரின விருப்பம் கொண்டவர்களின் அமைப்புகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும். நாட்டின் ஒரு மாகணத்தில் செய்யப்படும் இதுபோன்ற திருமணங்களை நாட்டின் பிற மாகாணங்களும் அங்கீகரிக்க இந்தச் சட்டம் வகைசெய்யும். 

செனட்டில், திருமணத்திற்கான மரியாதை சட்டம் (The Respect for Marriage Act ) அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. 258 க்கு 169 வாக்குகளைப் பெற்று இந்த மசோதா செனட்டில் நிறைவேறியது. கடந்த வாரம் இதே மசோதாவை செனட் 61-36 என்ற வாக்குகளால் நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து, ‘திருமணத்திற்கான மரியாதை சட்டம்’ சபையின் வாக்கெடுப்புக்கு வந்தது. செனட்டில் நடந்த வாக்கெடுப்பின் போது, செனட் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், 12 குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

“ஒவ்வொரு அமெரிக்கரின் கண்ணியத்தையும் சமத்துவத்தையும் காக்கும் ஜனநாயகக் கட்சியினரின் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடியான திருமண மரியாதைச் சட்டத்திற்கு வலுவான ஆதரவு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது…” அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தனது உரையில் தெரிவித்தார். 

மேலும் படிக்க | உலகப் பணக்காரர் என்ற கிரீடத்தை எலான் மஸ்கிடம் இருந்து பறித்த Bernard Anault!

“இரு கட்சி, இருசபை அடிப்படையில் நாம் இப்போது செயல்பட வேண்டும், மதவெறி கொண்ட தீவிரவாதத்தை எதிர்த்து ஒரே பாலின மற்றும் கலப்பு திருமணங்களுக்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை நீக்க வேண்டும். வலதுசாரி தீவிரவாதிகள், காதல் ஜோடிகளின் வாழ்க்கையை மோசமாக்க்குவதையும், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதையும், கடின உழைப்பு முன்னேற்றத்தின் கடிகாரத்தைத் திருப்புவதையும் தடுக்க திருமணத்திற்கான மரியாதை சட்டம் உதவும்” என்று நான்சி பெலோசி கூறினார்.

மேலும், கூட்டாட்சி சட்டத்தின் கீழ் திருமண சமத்துவத்தை நிலைநிறுத்த சட்டம் நடவடிக்கை எடுக்கும் என்று பெலோசி தெரிவித்தார். அவர் மேலும் கூறினார், “இன்று, பெரும்பான்மையான அமெரிக்கர்கள் விரும்பும் விஷயங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம், கண்ணியம், அழகு மற்றும் தெய்வீகம் என அன்பின் மீது நிலையான மரியாதையை ஏற்படுத்தும் முயற்சி இது” என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்தார்.

அனைத்து மாகாணங்களும் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற தேசியத் தேவையை இந்த மசோதா உருவாக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தனிப்பட்ட மாகாணங்கள் மற்றொரு மாகாணத்தின் சட்டப்பூர்வ திருமணத்தை அங்கீகரிக்கும். ஓரினச்சேர்க்கை திருமணத்தைப் பாதுகாக்கும் சட்டத்தின் மீதான வாக்கெடுப்பு அமெரிக்காவில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் Roe v. Wade முடிவை ரத்து செய்த பிறகு கவனத்தைப் பெற்றது.

கருக்கலைப்புக்கு இனி கூட்டாட்சி அரசியலமைப்பு உரிமை இல்லை என்று ஜூன் மாதம் உச்ச நீதிமன்றம் கூறியது. Roe v. Wade முடிவு ரத்து செய்யப்பட்டபோது, ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்த 2015ம் ஆண்டின் Obergefell v. Hodges முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ் நீதிமன்றத்தை வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | குளிர்கால அதிசய உலகம் காஷ்மீருக்கு வாங்க! களை கட்டுகிறது தால் ஏரி படகுத் திருவிழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.