அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வாரிசு படத்துக்கு நேரடி போட்டியாக வரும் இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாலை 6.30 மணிக்கு தாரை தப்பட்டை கிழிய மாஸாக வெளியாகியிருக்கிறது. ஜிப்ரான் இசையில் அனிரூத் பாடியிருக்கும் ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இருக்கிறது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ் …. போனதெல்லாம் போகட்டும் தேவையில்ல டியர்ஸ்… புடிச்சதை செய்யறது என்னைக்குமே மாஸ், நமக்கு முக்கியம் இன்னர் பீஸ், என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கிருக்கே’ உள்ளிட்ட வரிகள் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. அனிரூத்தின் குரலில் தெறிக்கும் வார்த்தைகளும், தர லோக்கலில் மக்களுக்கு புரியம்படி நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைக் கொண்டு பாடல் எழுதியிருக்கும் பாடலாசிரியர் வைசாக்கிற்கும் ரசிகர்கள் இப்போதே வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தியேட்டருக்கு ஏற்ற சரியான பாடலாக இருப்பதாக தெரிவித்துள்ள ரசிகர்கள், பொங்கல் வெளியீடாக வரும் துணிவு நிச்சயம் தாறுமாறாக இருக்கும் என டிவிட்டரில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். வாரிசு படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல், மாஸ் ஹிட் அடித்த நிலையில் துணிவு படத்தில் இருந்து இப்போது வெளியாகியிருக்கும் சில்லா சில்லா பாடலும் அதே ஹிட்டை ரீச் செய்யும் ரிவ்யூக்கள் வந்து கொண்டிருக்கின்றன. வாரிசுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் துணிவு இருக்கும் என கணித்துள்ள ரசிகர்கள், சில்லா சில்லா பாடலுக்கு லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.