வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து தாக்கல் செய்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தற்போது தலைமை பொறுப்பில் உள்ள இந்தியா ஓட்டளிக்காமல் புறக்கணித்தது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 15 உறுப்பு நாடுகள் உள்ளன. கவுன்சிலின் தற்போதைய தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
![]() |
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தன.
குறிப்பிட்ட சில நாடுகளின் மீது பொருளாதார தடைகள் உள்ளன. மனிதநேய அடிப்படையிலான பணிகள் மேற்கொள்வதற்கு, இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் இந்த தீர்மானம் இருந்தது. இதன் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.
அதே நேரத்தில் மற்ற 14 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.ஓட்டுப்பதிவுக்கு முன், கவுன்சிலின் தலைவராக உள்ள இந்தியாவின் துாதர் ருசிரா காம்போஜ் பேசியதாவது:இந்தத் தீர்மானம், பயங்கரவாத அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக உள்ளது. இந்த தடை விலக்கை தவறாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக எங்களுடைய அண்டை நாட்டில் உள்ள பல பயங்கரவாத அமைப்புகள், தொண்டு நிறுவனங்களாக அங்கு பதிவு செய்து இயங்குகின்றன. இந்த தடை விலக்கலால் அந்த பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிக் கொள்ளவும், ஆயுதங்களை வாங்குவதற்குமான வாய்ப்பை பாதுகாப்பு கவுன்சிலே வழங்குவது போல அமைந்துவிடும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement