புதுடெல்லி: காலநிலை மாற்றம் கதவுகளைத் தட்டுகிறது. ஏழை நாடுகளில் உள்ள மக்கள் சுற்றுச்சூழலின் சீரழிவுக்கு அதிக விலையை கொடுக்கப் போகிறார்கள் என்று ஜனாதிபதி முர்மு எச்சரிக்கை தெரிவித்து உள்ளார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது: இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் ‘அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி’ என்பதாகும்.
இது இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இலட்சியங்களுக்கு நெருக்கமானது. காலநிலை மாற்றம் கதவுகளைத் தட்டுகிறது. ஏழை நாடுகளில் உள்ள மக்கள் நமது சுற்றுச்சூழலின் சீரழிவுக்கு அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். நீதியின் சுற்றுச்சூழல் பரிமாணத்தை நாம் இப்போது கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.