`2021 ஆண்டைவிட 2022-ல் குற்றங்கள் குறைஞ்சிருக்கு’- புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்ட டிஜிபி!

கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சட்டம்- ஒழுங்கு குறித்து நேற்று கேட்டறிந்தார். மேலும் கோவை மாநகர காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணையவழி குற்றப்பிரிவு காவல்நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த டிஜிபி, பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் சன்மானம் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கோவை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க 15 காவல் நிலையங்கள் உள்ள நிலையில், முதல்வர் உத்தரவின் படி கோவை மாநகரில் சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில்  3 புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கூடுதல் காவல்துறையினர் பணியமர்த்தபடுவார்கள்” என தெரிவித்தார்.
image
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது எனக்கூறலாம். கடந்த வருடத்த்தில் அக்டோபர் மாதம் 1597 கொலை குற்றங்கள் நிகழ்துள்ளது. இந்த ஆண்டு 1368 கொலை குற்றங்கள் நடந்த நிலையில்  15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. அதேபோன்று ஆதாயக்கொலைகள் 89 லிருந்து 79 ஆக குறைந்துள்ளது. கொள்ளை வழக்குகள் 111 லிருந்து 96 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பாலான குற்றங்களை காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி  கண்டறிந்துள்ளனர்.
இதேபோன்று சென்னை உள்பட அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் அதிகபடியான  சிசிடிவி கேமராக்கள் அரசின் செலவிலேயே பொருத்தபட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் வேலூர், தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக சிசிவிடி கேமிராக்கள் பொருத்தபட்டுள்ள. நவீனமாக்க காவல் துறையில்  பெரியபெரிய குற்றங்களை கண்டறிய சிசிடிவி காமிராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
image
பழைய 75 ஆயிரம் பேரின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் காவல்துறை வசம் உள்ளது. ஒரு புகைப்படம் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருள் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் கடந்து குற்ற சம்பவங்கள் செய்பவர்களை கண்காணித்து வருவதாக தெரிவித்த டிஜிபி, தமிழக எல்லைகளில் செக்போஸ்ட் அமைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்துபவர்களை கண்காணித்து கைது செய்வது வருகிறது.
கேரளாவிலிருந்து வரும் பயோ மெடிக்கல் வேஸ்ட் தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்பட  6 இடங்களில் செக் போஸ்ட் அமைதது கண்காணித்து வருகிறது. வெளிமாநில வாகனங்களை கண்காணிக்க முதல்வரின் உத்தரவுப்படி சுங்கச்சாவடிகளில் நவீன கோமராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
image
இன்றைக்கு இருக்கூடிய ட்ரெண்டிங் இணையவழி குற்றங்கள் தான் எனக்கூறிய டிஜிபி, அதை வெளிப்படையாகவே கூறலாம். கடந்த நவம்பர் மாதம் வரை 45 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் நபர், டி.ஜிபி பெயரை கூறியே 7.5 இலட்சம் ஏமாற்றியுள்ளார். மின்பயனீட்டாளர் எண்ணில் ஆதார் எண்ணை இணைத்து தருவதாக கூறி, படித்த அதிகாரியையே ஏமாற்றியுள்ளனர். நெட் பேங்கிங் வேலை செய்ய வேண்டுமென்றால் பேன் கார்டு இணைக்க சொல்லி ஏமாற்றுதல், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி பெண்கள் பலர் பணத்தை இழந்துள்ளனர்.
லோன் கொடுப்பது போன்று ஏமாற்றுதல், போட்டா மார்பிங் செய்து அதிக வட்டியில் பணத்தை கட்ட சொல்லி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புகைப்படம் அனுப்பும் குற்றம் நடைபெறுகிறது. ஆன்லைன் சூதாட்டில் ஆசைகாட்டி பணத்தை ஏமாற்று உள்ளிட்டவை குறித்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது நைரிஜா வரை சென்று கைது செய்துள்ளோம். இணைய வழி வழக்கில் கைது செய்துவிடலாம். நாடு விட்டு பணம் சென்றால் அதை மீட்பது எளிதல்ல. கால தாமதம் ஆகும். இதுபற்றி கல்வி முக்கியம்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.