சிபிஎஸ்இ 10ஆம், 12ஆம் வகுப்பு டேட்ஷீட் 2023: 2022-2023 ஆம் கல்வியாண்டில் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை வாரியம் ஒரே பருவத்தில் நடத்தும். 2023 சிபிஎஸ்இ போர்டு தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஒரே கட்டமாக நடைபெறும். இதில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் நாட்டின் எதிர்காலம் என்று வரும்போது அதில் கல்வியின் சிறப்பான பங்களிப்பு இருக்கிறது. அந்தவகையில் சமீபத்தில், சிபிஎஸ்இ வாரியத்தின் டேட்ஷீட் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, ஆனால் போர்ட் தரப்பிலிருந்து இன்னும் டேட்ஷீட் எதுவும் வெளியிடப்படவில்லை என்று வாரியம் கூறியுள்ளது. எனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் டேட்ஷீட் போலியானது, மேலும் மாணவர்கள் அதை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
CBSE போர்டு 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15, 2023 முதல் தொடங்க உள்ளது, இதனிடையே இந்த 2 வகுப்புகளின் டேட்ஷீட் குறித்து இதுவரை எவ்வித தகவலும் போர்டில் வெளியிடவில்லை. மறுபுறம், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு ப்ராக்ட்டிகல்ஸ் ஜனவரி 1, 2023 முதல் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாரியம் வெளியிட்டுள்ளது.
CBSE வாரியம் 2023 10 ஆம் வகுப்பு தாளில் 40 சதவீத கேள்விகளும், 12 ஆம் வகுப்பில் 30 சதவீத கேள்விகளும் திறன் அடிப்படையிலான கேள்விகளாக இருக்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதில் அளித்து இந்த தகவலை தெரிவித்தார். இதனுடன், இந்த கேள்விகளின் வடிவம் வித்தியாசமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அப்ஜெக்டிவ் டைப், கேஸ் பேஸ்டு, ஆர்குமென்டேஷன் ரீசனிங் மற்றும் கன்ஸ்ட்ரக்டிவ் ரெஸ்பான்ஸ் டைம் ஆகிய கேள்விகள் இதில் இடம் பெற்றிருக்கும் என்றார்.
இதற்கிடையில் இந்த மாதம் இறுதிக்குள் 10, 12 ஆம் வகுப்பின் டேட்ஷீடை சிபிஎஸ்இ வாரியம் வெளியிடலாம். அத்துடன் மாணவர்கள் தேர்வு தேதி, டேட்ஷீட், ப்ராக்ட்டிகல்ஸ், எடமிட் கார்டு மற்றும் பிற சமீபத்திய விவரங்களுக்கு CBSE வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.