நாமக்கல்: உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலியால் நாமக்கலில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரித்துள்ளது. மாதந்தோறும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதியான நிலையில் கடந்த மாதம் 3 மடங்கு அதிகரித்து 1.50 கோடி ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும், அதிகரித்து 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி ஆகியுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
