சிவகங்கை: திருப்புத்தூரில் மீன் சந்தையில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 300 கிலோ தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பார்மலின் ரசாயனம் தடவி மீன்கள் விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மீன் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம், தர நிர்ணய சான்று பெறாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
