Thalapathy vijay:அந்த ஒரு விஷயத்திற்கு விஜய் ரொம்ப பயப்படுவார்..எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன சீக்ரட்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை வம்சி இயக்க ராஷ்மிகா முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றார்.

இக்கூட்டணி புதிதாக இருப்பதால் ரசிகர்கள் வாரிசு திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Vishal: அவர் திருமணம் செய்யும் அதே நாளில் எனக்கும் திருமணம் நடக்கும்..விஷால் ஓபன் டாக்..!

இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தின் மூலம் இணையவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் ஜனவரி மாதம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் விஜய்யின் படங்களை தயாரிக்கவும், இயக்கவும் பலபேர் போட்டிபோட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அவரின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்துள்ளது. இதற்கெல்லாம் மிகமுக்கிய காரணம் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான்.

விஜய்யை ஒரு ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க செய்த எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜய்க்கும் சமீபகாலமாக மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் விஜய்யின் பள்ளிப்பருவ காலத்தில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அவர் கூறியதாவது, விஜய்க்கு சிறுவயதில் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போகும். அப்போது அவருக்கு ஊசி போடுவதற்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம். அந்த சமயத்தில் விஜய் ஊசி போட்டுக்கமாட்டேன் என முரண்டுபிடிப்பார். அவருக்கு ஊசி என்றாலே பயம். அழுது ஆர்ப்பாட்டம் செய்வார் என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.