`நண்பன் உதயா இதுபோன்ற பதவிக்கு வரவேண்டுமென்பது என் கனவு!’- நடிகர் விஷால் நெகிழ்ச்சி!

“ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் என்னை நடிக்க கேட்டபோது நான் மறுத்துவிட்டேன். ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயம் தடைசெய்ய வேண்டும்” என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

நடிகர் விஷாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக ஏழைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலத்துகொண்டு நல திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “பல பேரின் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் சூதாட்டத்தை கட்டாயம் தடைசெய்ய வேண்டும். உழைத்து கை நிறைய சம்பாதிக்கும் பணம் மட்டும் ஒருவருக்கு உதவும். தவிர சூதாட்டம் போன்ற தவறான வழிகளில் வரும் பணம் நிலைக்காது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரத்தில் என்னை நடிக்க அழைத்தபோது நான் மறுத்துவிட்டேன்” என தெரிவித்தார்.

image

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த விஷால், “நண்பன் உதயா இதுபோன்ற பதவிக்கு வரவேண்டும் என்ற எனது 9 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற பெயரை ஒருபோதும் பயன்படுத்தாமல், தனக்கான தனி அடையாளத்தோடு வலம் வந்த உதயநிதி. அவரின் தகுதிக்கேற்ப அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் என்பது மேலோட்டமாகவே தெரியும். மற்றபடி தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் உதயநிதி திறம்பட செயல்படுவார்”  என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

image

அமைச்சரான பிறகு உதயநிதி திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இனி திரைப்பட பாடல்களை மேடைகளில் பாடாமல் இருக்க வேண்டும்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.