நீலகிரி: குன்னூாில் நள்ளிரவில் 30 சென்டிமீட்டர் மழை பெய்ததன் காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. 30 சென்ட்டிமீட்டர் மழை பெய்ததால் குன்னூர் மேட்டுப்பாளையம் ஆகிய 5 இடங்களீல் மண் சரிவு ஏற்பட்டது.
அம்பிகாபுரம், டி.டி.கே. சாலையில், பெய்த மழையில் 7 வகனைங்கள் அடித்து செல்லப்பட்டன, இந்திராநகர், வண்டிசோலை பல இடங்களில் மரங்கள் விழந்தன. தீ அணைப்புத்துறையினர், மற்றும் வருவாய்த்துறையினர், சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான மலை ரயில் பாதை 11 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குன்னூர் சென்ற ரயில் பாதியில் திருமியது. மண் சரிவு காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது ரயில் பாதையில் விமுந்த மண்ணை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.