ரூ.560-க்கு 800 கிராம் பிளாக் பாரஸ்ட்: கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஆவினில் 12 வகை கேக்குகள் அறிமுகம்

சென்னை: ஒவ்வொரு பண்டிகையின்போதும் பல புதிய இனிப்பு வகைகள் மற்றும் பால் பொருட்களை ஆவின் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு கேக் வகைகளை ஆவின் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ராபெரி கேக், பைனாப்பில் கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக்கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை 800, 400 மற்றும் 80 மி கிராம் அளவுகளில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. மொத்தம் 12 வகையான கேக்குகளை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அவற்றின் விலைப்பட்டியல்:

கேக் வகைகள் – அளவு(கிராமில்) – ரூபாய்

  • பிளாக் பாரஸ்ட் கேக் (Black Forest cake) – 800கி/400கி/80கி – ரூ.560/ரூ.280/ரூ.70
  • சாக்கோ ட்ரிபில் கேக் (Choco Truffle cake) – 800கி/400கி – ரூ.700/ரூ.350
  • ஸ்ட்ராபெரி கேக் (Strawberry cake) – 800கி/400கி/80கி – ரூ.720/ரூ.360/70
  • பைனாப்பில் கேக் (Pine Apple cake) – 400கி/80கி – ரூ.360/ரூ.70
  • ஒயிட் ஃபாரஸ்ட் கேக் (White Forest cake) – 800கி/400கி/80கி – ரூ.720/ரூ.360/ரூ.70
  • பட்டர்ஸ்காட்ச் கேக் (Butter Scotch cake) – 800கி/400கி/80கி – ரூ.800/ரூ.400/ரூ.70
  • ரெயின்போ கேக் (Rainbow cake) – 400கி/80கி – ரூ.500/ரூ.70
  • பிளாக்கரண்ட் கேக் (Black Current cake) – 400கி/80கி – ரூ.390/ரூ.70
  • ரெட் வெல்வெட் கேக் (Red Velvet cake) – 400கி/80கி – ரூ.600/ரூ.70
  • மேங்கோ கேக் (Mango cake) – 800கி – ரூ.720
  • ப்ளூ பெர்ரி கேக் (Blue Berry cake) – 800கி – ரூ.840
  • ஜெர்மன் பிளாக் பாரஸ்ட் கேக் (German Black Forest cake) 800கி/80கி – ரூ.780/ரூ.70

இந்த கேக் விற்பனையை விருகம்பாக்கத்தில் உள்ள அதிநவீன ஆவின் பாலகத்தில் பால்வளத் துறை அமைச்சர் திசா.மு.நாசர் இன்று (டிச.14) அறிமுகம் செய்துவைத்தார். பொதுமக்கள் கேக் வகைகள் மற்றும் சிறப்பு இனிப்புகளை மொத்தமாக ஆர்டர் செய்ய சென்னை தலைமை அலுவலகம் (7358018395), சென்னை வடக்கு மண்டலம் (9566860286), சென்னை மத்திய மண்டலம் (9790773955), சென்னை தெற்கு மண்டலம் ( 9444728505), கட்டணமில்லா எண் (18004253300) ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.