Udhayanithi Stalin: அன்புத் தம்பி… 3 தலைமுறை அனுபவம் உதவும்… உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினி கமல் வாழ்த்து!

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் கமல்ஹாசன் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இன்று 35வது அமைச்சராக பொறுப்பேற்றார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போவதாக கடந்த சில மாதங்களாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.Nayanthara: நயன்தாராவா இது… வேற மாரி ஆயிட்டாங்களே… தெறிக்கவிடும் லேட்டஸ்ட் லுக்!
அன்புத் தம்பிஅமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்த்துகிறேன் தம்பி என குறிப்பிட்டு உதயநிதியின் டிவிட்டர் ஹேண்டிலை டேக் செய்துள்ளார். Udhayanithi Stalin: அமைச்சரான கையோடு அதிர்ச்சி சேதி சொன்ன உதயநிதி ஸ்டாலின்.. இதை எதிர்பார்க்கல!
3 தலைமுறை அனுபவம்இதேபோல் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள டிவிட்டில், . அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.. என குறிப்பிட்டுள்ளார்.Taapsee Pannu: நான் என்ன மிருகமா? ஆவேசமாக சீறிய நடிகை டாப்ஸி!
ஜெயிக்கணும் முதலாளிஇதேபோல் நடிகர் சந்தானம் பதிவிட்டுள்ள டிவிட்டில் நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் பந்தையங்களும் போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கனும்! இந்த கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி என குறிப்பிட்டுள்ளார். நடிகர் சந்தானமும் உதயநிதி ஸ்டாலினும் ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.Arya Sayyesha: முதல் முறையாக வெளியான போட்டோ.. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கும் ஆர்யா மகள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.