மழையில் ஒழுகும் பழுதடைந்த அரசுப்பேருந்தினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, ஓட்டுநர் ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று அதிகாலை குமுளியிலிருந்து திண்டுக்கல்லுக்குச் செல்லும் பேருந்தை, ஓட்டுநர் முருகேசன் இயக்கியுள்ளார்.
வழியில் மழை பெய்தபோது, பேருந்திற்குள்ளேயே தண்ணீர் ஒழுகியதால், பயணிகள் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், பேருந்தின் நிலையை, மாவட்ட ஆட்சியர் நேரில் பார்த்து தெரிந்துக் கொள்ளும் வகையில், பயணிகளை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு, அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்தை ஓட்டி வந்து, முருகேசன் மனு அளித்தார்.