உலகக்கோப்பை போட்டிக்கு நடுவே இறந்த அமெரிக்க பத்திரிக்கையாளர்: உண்மை காரணத்தை வெளியிட்ட தமிழ் வம்சாவளி மனைவி


கத்தாரில் அமெரிக்க விளையாட்டு பத்திரிக்கையாளர் இறந்ததற்கான காரணத்தை தமிழ் வம்சாவளி பெண்ணான அவரது மனைவி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கிராண்ட் வால் (Grant Wahl) aortic aneurysm என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதை அவரது மனைவி செலின் கவுண்டர் (Céline Gounder) இன்று (டிச.14) உறுதிப்படுத்தினார். மேலும், கிராண்ட் வாலின் மரணத்தில் எந்த தவறும் இல்லை என்று சந்தேகங்களை நிராகரித்தார்.

அமெரிக்க பத்திரிக்கயாளர் மரணம்

விளையாட்டு பத்திரிக்கையாளர் கிராண்ட் வால் (48) கடந்த வெள்ளிக்கிழமை அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியின் போது சரிந்து விழுந்தது மாரடைப்பால் உயிரிழந்தார்.

உலகக்கோப்பை போட்டிக்கு நடுவே இறந்த அமெரிக்க பத்திரிக்கையாளர்: உண்மை காரணத்தை வெளியிட்ட தமிழ் வம்சாவளி மனைவி | Us Journalist Death Qatar Revealed Tamil WifePHOTO: GRANT WAHL/INSTAGRAM

அந்த நேரத்தில், வாலின் திடீர் மரணத்திற்கும் கத்தார் அதிகாரிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்று பலர் காரணம் கூறினர்.

ஏனெனில், அதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஓரினசேர்க்கையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வானவில் நிறங்கள் கொண்ட சட்டையை அணிந்ததற்காக, கிராண்ட் வால் கத்தார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இதனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவரின் சகோதரர் பரபரப்பை கிளப்பினார்.

நோயால் மரணம் – மனைவி உறுதி

இந்நிலையில், அவரது மனைவி செலின் கவுண்டர் (Céline Gounder) கிராண்ட் வாலின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை, அவர் aortic aneurysm என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பதை உறுதிசெய்தார்.

மேலும், தனது கணவரின் உடலை மீண்டும் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்புவதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு செலின் கவுண்டர் சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்தார்.

இறப்பதற்கு முன், வால் தனது வலைப்பதிவில் அதிக மன அழுத்தம் காரணமாக கத்தாரில் உள்ள மருத்துவ மருத்துவமனைக்குச் சென்றதாக எழுதியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வம்சாவளி பெண்

உலகக்கோப்பை போட்டிக்கு நடுவே இறந்த அமெரிக்க பத்திரிக்கையாளர்: உண்மை காரணத்தை வெளியிட்ட தமிழ் வம்சாவளி மனைவி | Us Journalist Death Qatar Revealed Tamil WifeTwitter:Céline Gounder

மருத்துவரான செலின் கவுண்டர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருமபாளையம் கிராமத்தை போர்விகமாக கொண்டவர். அவரது தந்தை நடராஜ் கவுண்டர் 1960-களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர். செலின் சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் கோவிட்-19 ஆலோசனை வாரிய மாற்றக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.