தூத்துக்குடி அருகே உரம் ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து கயிறு அவிழ்ந்து விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவரின் கழுத்தில் சுற்றியதில், நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்து, ஏரலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்திசையில் லாரியில் இருந்து ஒரு உரமூட்டை கீழே விழுந்து, கட்டப்பட்டிருந்த கயிறு சாலையில் விழுந்தது.
அவ்வழியாக பைக்கில் சென்ற முத்துவின் கழுத்தில் கயிறு சுற்றி தூக்கி வீசப்பட்டார். காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஏரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.