சென்னை: ஊராட்சிகளுக்கு நிதி பகிர்வு அதிகாரம் அளித்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அதிகார பரவலாக்கல் என்பதே மக்களாட்சியில் மக்களுக்கான பணிகளை விரைந்து நிறைவேற்றுவதற்கான திறவுகோல். 1996-ல் எல்.சி. ஜெயின், 97-ல் கோ.சி.மணி ஆகியோர் தலைமையிலும், 2007-ல் என் தலைமையிலும் உயர்நிலைக் குழுக்கள் அமைத்து, அதன் பரிந்துரைகளின்படி திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
