சென்னை: திருச்சி நிதி நிறுவன மோசடி வழக்கில் முகவராக செயல்பட்ட ராஜ்குமார் என்பவருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. தான் முகவராக மட்டுமே செயல்பட்டதால், மோசடிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என ராஜ்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் முக்கிய குற்றவாளி, மேலும் இவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளோருடன் சேர்ந்து மோசடி செய்துள்ளார். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவதாக மனுதாரர் தரப்பில் உறுதி அளித்ததை அடுத்து ஜாமின் வழங்கப்பட்டது.
