சேலம் : மேட்டூர் அணையில் 10 பேர் கொண்ட அணை பாதுகாப்பு குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அணை பாதுகாப்பு இயக்க கண்காணிப்பு பொறியாளர் செல்வபாக்கியம், துணை கண்காணிப்பு பொறியாளர் பழனியம்மாள் ஆகியோர் மேட்டூர் அணையில் வலது – இடது கரை, உபரி நீர்போக்கிகள், 16 கண் மதகுப்பாலம், சுரங்கப் பகுதிகளில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
