சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பர பதாகைகள் உள்ளிட்டவை மண்டல அலுவலரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த விளம்பரப் பலகைகளின் உறுதித்தன்மைகள் மாநகராட்சி அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு, மழை மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சாயக்கூடிய நிலையில் உள்ள விளம்பரப் பலகைகளும் உடனடியாக அகற்றப்படுகின்றன.
அதன் படி, இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட 62 விளம்பரப் பலகைகள் மற்றும் 33 விளம்பரப் பதாகைகள் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த பலகைகள் மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்ட நிலையில், அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப்பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது