மீண்டும் நாடாளுமன்ற முடிவை மீறி வெளிநாட்டவர் ஒருவருக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட்டுள்ள சுவிஸ் நீதிமன்றம்…


சுவிஸ் நீதிமன்றம் ஒன்று, இரண்டாவது முறையாக, மாகாண நாடாளுமன்றத்தின் முடிவை மீறி வெளிநாட்டவர் ஒருவருக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட்டுள்ளது.

சிறு திருட்டில் ஈடுபட்டவருக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட்ட சுவிஸ் நீதிமன்றம்
 

சில வாரங்களுக்குமுன், 18 வயது இளைஞர் ஒருவருக்கு மாகாண நாடாளுமன்ற முடிவை மீறி சுவிஸ் குடியுரிமை வழங்கியது Aargau மாகாண நீதிமன்றம் ஒன்று.

அவர் சிறுவயதில் ஒரு USB ட்ரைவையும், சட்டை ஒன்றையும் திருடியதற்காக, அவருக்கு குடியுரிமை அளிக்கக்கூடாது என மாகாண நாடாளுமன்றம் முடிவு செய்தது. திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 122 சுவிஸ் ஃப்ராங்குகள்.

ஆனால், நாடாளுமன்றத்தின் முடிவு தன்னிச்சையானது, முறையற்றது என்று கூறி நாடாளுமன்றத்தின் முடிவை நிராகரித்த நீதிமன்றம், அந்த இளைஞருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்கி தீர்ப்பளித்தது.

மீண்டும் நாடாளுமன்ற முடிவை மீறி வெளிநாட்டவர் ஒருவருக்கு குடியுரிமை வழங்க உத்தரவு

இந்நிலையில், இரண்டாவது முறையாக, மாகாண நாடாளுமன்றத்தின் முடிவை மீறி, வெளிநாட்டவர் ஒருவருக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட்டுள்ளது Aargau மாகாண நீதிமன்றம் ஒன்று.

15 வயதுள்ள அந்த நபர், தனது மோட்டார் சைக்கிளில் சட்ட விரோதமாக புகைபோக்கியை பொருத்தியதாகவும், அந்த மோட்டார் சைக்கிள் அதிக சத்தத்தை ஏற்படுத்தியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதையும் மேற்கோள் காட்டி அவருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்க Aargau மாகாண நாடாளுமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஆனால், இம்முறையும் நாடாளுமன்றத்தின் முடிவு தன்னிச்சையானது என்று கூறி நாடாளுமன்றத்தின் முடிவை நிராகரித்த நீதிமன்றம், தனது முடிவை மீளாய்வு செய்யுமாறு மாகானத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
 

மீண்டும் நாடாளுமன்ற முடிவை மீறி வெளிநாட்டவர் ஒருவருக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட்டுள்ள சுவிஸ் நீதிமன்றம்... | Aargau Told Review Citizenship Decision Again



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.