தமிழ் சினிமாவில் தன் ஒவ்வொரு படத்தின் மூலமும் புது புது வசூல் சாதனை செய்பவர் நடிகர் விஜய். அதன் காரணமாகவே இவரை வசூல் சக்கரவர்த்தி என அன்போடு அழைத்து வருகின்றனர். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் விட்டதை வாரிசு திரைப்படத்தில் பிடித்திடும் முனைப்பில் விஜய் இருக்கின்றார். வம்சியின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க தமன் இசையமைத்து வருகின்றார்.
Thalapathy vijay: விஜய் ஷூட்டிங் ஸ்பாட்ல அதை மட்டும் செய்யவே மாட்டாராம் ..வாரிசு பட நடிகர் சொன்ன தகவல்..!
வழக்கமான விஜய் படங்களை போல இது இருக்காது எனவும், சற்று வித்யாசமாக அதே சமயத்தில் அனைத்து விதமான ரசிகர்களும் ரசிக்கும் படி இப்படம் அமையும் எனவும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதையடுத்து இப்படத்திலிருந்து ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி மாஸ் ஹிட்டான நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிம்பு பாடிய தீ தளபதி பாடல் வெளியானது.
இரண்டு பாடல்களும் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற அடுத்ததாக வாரிசு படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வாரிசு படத்தைப்பற்றி ஒவ்வொரு தகவல்களாக இணையத்தில் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.
அந்த வகையில் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த திலிப் சுப்புராயன் படத்தை பற்றி பல தகவல்களை பேசியுள்ளார். அந்த வகையில் வாரிசு படத்தின் இடைவெளி காட்சியின் போது ஒரு சண்டைக்காட்சி வரும் என்றும், அந்த காட்சி ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டை காட்சிதான் படத்தில் ஹைலைட்டாக இருக்குமாம். வெறும் சண்டைகாட்சியாக மட்டும் கிளைமாக்ஸ் அமையாமல் சற்று எமோஷ்னலாகவும் இருக்கும் என்று திலிப் சுப்புராயன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.