ஆட்டோ டிரைவர் வீட்டில் என்ஐஏ குழுவினர் சோதனை

மதுரை: மதுரை, நெல்பேட்டையை சேர்ந்தவர் உமர் ஷெரிப். ஆட்டோ டிரைவர். இவர் தடை செய்யப்பட்ட அமைப்பில் பதவி வகித்து வந்தார். இதுதொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (எனஐஏ) அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவர் நேரில் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் தெருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று காலை என்ஐஏ அதிகாரிகள் உமர்ஷெரிப்பை அழைத்து வந்து சோதனை நடத்தினர். தொடர்ந்து 4 மணி நேரம் நடத்திய சோதனையில் வீட்டிலிருந்து வாள், வேல்கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களில் சிலவற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிகிறது. அவரை விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து சென்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.