அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியான தவாங்கில் கடந்த 9ம் தேதி இந்திய ராணுவத்தால் சீனப்படையினர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் குறித்து சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சீனப்படைகள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது எல்லை தாண்டிவந்த இந்திய வீரர்கள் சீன வீரர்களுடன் மோதியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அசல் எல்லைக் கோடு பகுதியில் 8 அல்லது 10 வீரர்கள்தான் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், 300 சீன வீரர்கள்அந்த வழியாக வரவேண்டிய அவசியம் ஏதுமில்லை என்றும் இந்திய ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
300 வீரர்களுடன் ஊடுருவல் முயற்சி நடைபெற்றதாகவும், அப்பகுதியில் நீண்ட காலமாகவே சீன அத்துமீறல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.