Pathaan Controversy: தீபிகா படுகோனே காவி உடை சர்ச்சை: பிரபல தமிழ் நடிகர் பரபரப்பு கருத்து.!

ஷாருக்கானின் ‘பதான்’ படத்திலிருந்து வெளியான பாடல் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஒரு பக்கம் இந்தப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவ பொம்மைகளை எரித்து வருகின்றனர். மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் BanPathaan என்ற ஹேஸ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் தீபிகா படுகோனேவுக்கு ஆதரவாக முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாரூக்கான், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘பேஷ்ரம் ரங்’ பாடல் சில தினங்களுக்கு முன்பு யூடியூபில் வெளியானது. நீச்சல் உடையில் தீபிகா படுகோனேவின் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள இந்தப்பாடலின் வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும், இரண்டு நாட்களில் பல மில்லியன் பார்வைகளை கடந்து இப்பாடல் டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. இந்நிலையில் இப்பாடலில் தீபிகா படுகோனே அணிந்துள்ள நீச்சல் உடையின் நிறமும், பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள ‘பேஷ்ரம் ரங்’ என்ற வார்த்தைகளும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. ‘பேஷ்ரம் ரங்’ என்றால் ‘வெட்கமற்ற நிறம்’ என்று அர்த்தம். பாடலின் முடிவில் காவி நிற நீச்சல் உடை ஒன்றை அணிந்து வருகிறார் தீபிகா.

இது தொடர்பாக புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் சில இந்து அமைப்பினர் ‘பதான்’ படத்திற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலின் காட்சியில் காவி நிறத்திலான கவர்ச்சி உடையில் தீபிகா படுகோன் காட்சிகளை நீக்காவிட்டால் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Indian 2: ‘மகத்தான மனிதர்கள்’.. ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் கலைஞர், நேதாஜி.!

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த பிரச்சனையில் ‘பதான்’ படக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில் ’காவி உடை அணிந்தவர்கள் சிறுமிகளை கற்பழிக்கிறார்கள், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள், வெறுப்பு பேச்சு பேசுகிறார்கள்.

Vijay Tv: விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்: நடிகை ப்ரியா பவானி சங்கர் உருக்கம்.!

ஆனால் காவி உடை அணிந்து திரைப்படத்தில் மட்டும் நடிக்க கூடாதா? என்று காரசாரமாக கேள்வி எழுப்பிவுள்ளார். அவரது இந்த பதிவுக்கு கீழ் ஏராளமானவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பாலிவுட்டில் தங்களுக்கு பிடிக்காத நடிகர்கள், தங்களது கொள்கைகளுக்கு ஒத்து போகாதவர்களின் படங்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்யும் போக்கு திரை ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.