சென்னையில் காதல் தோல்வியால் கேமராமேன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை ராஜீவ் காந்தி(36) என்பவர் சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் தனது நண்பர்களுடன் தங்கி சினிமா துறையில் கேமராமேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ராஜீவ் காந்தி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வடபழனி போலீசார், ராஜீவ் காந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ராஜீவ் காந்தி ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வி அடைந்ததால் அவர் கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அறையிலேயே இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அறையில் சோதனை செய்ததில் ராஜீவ் காந்தி எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் எனது தற்கொலைக்கு காரணம் இல்லை என்றும், காதல் பிரச்சினையால் ஏற்பட்ட மனவேதனையில் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று எழுதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.