வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கியூ: உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் இன்று அதிரடி தாக்குதல் துவக்கியது. இன்று நடந்த சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மூலம் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. உக்ரைன் வீரர்களும் தங்களது படை பலத்தால் நாட்டை காப்பாற்ற தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் மீது போர் ; 2022 பிப். 24 ல் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்பால் ரஷ்ய பங்கு சந்தை 45 சதவீதம் சரிவை சந்தித்தது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நாட்டு படைகள் பலத்துடன் ரஷ்யாவை இன்றும் எதிர்கொண்டு ” தில்” லாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று (டிச.16) ரஷ்யா பலம் வாய்ந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் தலைநகர் கியூ, கார்கிவ், கிரியு, வடக்கு கார்கிவ் ஆகிய நகரங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எரிசக்தி ஆற்றல் மையம் மற்றும் முக்கிய கட்டடங்கள் மீது இந்த ஏவுகணை விழுந்தன. நகர் முழுவதும் பெரும் அலாரம் சப்தம் கேட்டது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் இருளில் மூழ்கியதாக கார்கிவ் மேயர் இகோர் டெரேகோவ் கூறியுள்ளார்.

தொடர்ந்து உக்ரைனில் இன்று பதட்டம் அதிகரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement