உக்ரைனில் பயங்கர ஏவுகணை தாக்குதல்: கொடூர முகத்தை மீண்டும் காட்ட தொடங்கும் ரஷ்யா



உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா இன்று மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தி இருப்பதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனை சிதைக்க தயாராகும் புடின்

உக்ரைன் போர் 11வது மாதத்தை தொட்டு இருக்கும் நிலையில், ரஷ்யா மற்றொரு மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உக்ரைன் முதன்மை தளபதி எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

அதனடிப்படையில் இராணுவ பயிற்சிகள் தீவிரமாக வழங்கப்பட்டு போருக்கு ஏற்ற வீரர்களாக தயார்படுத்தப்பட்ட 200,000 ரஷ்ய வீரர்களை, உக்ரைன் மீதான புதிய தாக்குதலில் பயன்படுத்த காத்து இருப்பதாக தளபதி Valery Zaluzhny தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனவரி கடைசி வாரத்தில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில், இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படும் என கூறியுள்ள அவர், நாம் கண்டிப்பாக அதற்கு தயாராக வேண்டும் என்று எச்சரித்து இருந்தார்.

மேலும் பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்பட்டு போர் தற்போதைக்குள் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படாத நிலையில், ரஷ்யா தனது ஆக்ரோஷமான தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று எச்சரிக்கை தொடர்ந்து வெளிவந்து கொண்டு உள்ளது.

மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்

ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு வருகிறது என்று பல எச்சரிக்கை அறிக்கைகள் வெளிவந்து கொண்டு இருந்த நிலையில், இன்று ரஷ்யா உக்ரைனில் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை அரங்கேற்றி இருப்பதாகவும், எங்கள் சக்தி நிலையங்களை தாக்கி, மக்களை பாதுகாப்பான இடங்களில் பதுங்கி இருக்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர் என்றும் உக்ரைனிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனிய தலைநகர் கீவ், தெற்கு கிரிவி ரிஹ் மற்றும் வடகிழக்கு கார்கிவ் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வெடிப்புகள் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இன்று உக்ரைனிய நகரங்கள் முழுவதும் பாதுகாப்பு சைரன் ஒலிகள் எழுப்பப்பட்டதாகவும், வின்னிட்சியாவின் மத்திய நகரங்கள், பொல்டாவா மற்றும் வடக்கு சுமி பகுதிகள் உட்பட கருங்கடல் பகுதியான ஒடேசா-வும் தாக்குதலுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் துல்லியமாக தெரிய வராத நிலையில், உக்ரைன் முழுவதும் வான் பாதுகாப்பு அமைப்புகள் வேலைகளில் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கீவ்வின் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஒலெக்ஸி குலேபா டெலிகிராமில், “எதிரிகள் மிகப்பெரிய தாக்குகின்றனர் என பதிவிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.