பாஜகவின் வாரிசு ஆகிறாரா விஜய்?… ரசிகர்களால் எழும் கேள்வி

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. ஒருபக்கம் திரையரங்குகள் ஒதுக்கீட்டு தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ கூறியிருக்கும் கருத்து விமர்சனத்தை சந்தித்துவருகிறது. மறுபக்கம் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறார். உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரை போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளனர். இதனிடையே வாரிசு பட ரிலீஸ் விவகாரத்தில் உதயநிதிக்கும் நடிகர் விஜய்க்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அழுத்தங்களை சமாளிக்க அரசியலில் காலடி எடுத்துவைப்பது போன்ற நடவடிக்கைகளை தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பின் மூலமாக விஜய் வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் விஜய்யின் ரசிகர்கள்; உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அரசியல் கட்சிகளின் வாரிசு அரசியலை சீண்டும் வகையில்  திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் என வாரிசுகளின் படங்களை அச்சிட்டு “எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழ்நாட்டின் அரசியல் வாரிசே” என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். 

மேலும் அந்த போஸ்டரில் காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி அவரது மகன் ராகுல் காந்தி, திமுக கட்சி முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்றைய முதல்வர் ஸ்டாலின், மதிமுக கட்சி தலைவர் வைகோ அவரது மகன் துரை வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டியுள்ளனர்.

இதற்கிடையே தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் நிலவிவருவதாக பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் ரசிகர்களும் வாரிசு அரசியலை விமர்சிப்பதன் மூலம் அவர் பாஜகவின் வாரிசாக மாற வேண்டுமென போஸ்டர்கள் மூலம் ரசிகர்கள் கூறுகிறார்களா எனவும் பலர் கேள்வியை முன்வைக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.