பெண் வெறுப்பு போராட வேண்டிய தீமை: தீபிகாவுக்கு ஆதரவாக நடிகை ரம்யா கருத்து


நாம் அனைவரும் மா துர்காவின் உருவகம், எனவே பெண் வெறுப்பு என்ற தீமைக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று நடிகையும் முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆன ரம்யா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆடையால் வெடித்துள்ள சர்ச்சை

இயக்குனர் சித்தார்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்து இருக்கும் பாதன் திரைப்படத்தின் முதல் பாடல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியானது.

3 நிமிடங்கள் 15 நொடிகள் ஓடக்கூடிய இந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் காவி நிறம் கொண்ட டூ பீஸ் உடையில் தோன்றுவார்.

உடையில்அதே பாடலில் பல்வேறு நிறங்களை கொண்ட உடையில் தீபிகா படுகோன் தோன்றினாலும், ஒற்றை இடத்தில் இடம்பெற்ற காவி நிற உடையால் தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.

அந்த காட்சிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக இருப்பதாக தெரிவித்து அவற்றை படத்தில் இருந்து நீக்காவிட்டால், திரைப்படத்தை காட்சிப்படுத்த விட மாட்டோம் என்று சிலர் கொடி பிடித்து வருகின்றனர்.

தீபிகாவுக்கு ஆதரவு

நடிகை தீபிகாவின் ஆடை தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கும் நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகையும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ரம்யா, இந்த சர்ச்சை தொடர்பாக ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “நடிகை சமந்தா தனது விவாகரத்திற்காக விமர்சிக்கப்படுகிறார், சாய் பல்லவி அவரது கருத்துக்காக, ராஷ்மிகா  பிரிந்ததற்காக, தீபிகா அவரது ஆடைக்காக, இவ்வாறு பல பெண்கள் அவர்களது அனைத்து விஷயத்திற்காகவும் விமர்சிக்கப்படுகிறார்கள்.”

 “தேர்வு சுதந்திரம் நமது அடிப்படை உரிமை, பெண்கள் நாம் அனைவரும் மா துர்காவின் உருவகம்- பெண் வெறுப்பு என்ற இந்த தீமைக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.” 

பெண் வெறுப்பு போராட வேண்டிய தீமை: தீபிகாவுக்கு ஆதரவாக நடிகை ரம்யா கருத்து | Actor Deepika Padukone Saffran Issue Ramya SupportRamya/Divya Spandana-ரம்யா/திவ்யா ஸ்பந்தனா(twitter)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.