புதுடில்லி ”கடன் தருவதாக கூறி மக்களிடம் மோசடி செய்யும் சீன செயலிகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியுடன், மத்திய அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ராஜ்யசபாவில் நேற்று பூஜ்ய நேரத்தின் போது, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,யின் கேள்விக்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
எளிமையான முறையில் கடன் தருவதாக கூறி, சீன செயலிகள் மக்களிடம் மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை, நிதி அமைச்சகம் ஆகிய துறைகள், ரிசர்வ் வங்கியுடன் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி பிரதிநிதிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். கடன் செயலிகளை தவறாக பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement