’பணிந்த சினிமா வாரிசு..தட்டி தூக்கிய அரசியல் வாரிசு’ ரெட்ஜெயண்ட் கையில் வாரிசு

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாரிசு திரைப்படத்தின் தியேட்டர் உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் வாரிசு திரைப்படத்துக்கு ஏற்பட்டிருந்த மிகப்பெரிய சிக்கல் விலகியிருக்கிறது. பொங்கல் விழாவின்போது வாரிசு திரைப்படம் வெளியாகுமா? வெளியாகாதா? என ஏக்கத்தில் இருந்த விஜய் ரசிகர்கள், துணிவோடு வாரிசு பொங்கலை கொண்டாட தயாராகலாம். வாரிசு படத்தின் சென்னை, கோயம்பத்தூர் மற்றும் சில ஏரியாக்களின் தியேட்டர் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இப்போது வெளியாகியுள்ளது.

வாரிசு vs துணிவு

வரும் தைப்பொங்கல் விழாவையொட்டி அஜித்குமாரின் துணிவு படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியிருப்பதால், அந்த நிறுவனம் தங்கள் படத்துக்காக பெரும்பாலான தியேட்டர்களை லாக் செய்துவைத்திருந்தது. இந்த நேரத்தில் விஜய்யின் வாரிசு படமும் பொங்கல் ரிலீஸ் கோதாவில் இறங்கியதால் சிக்கல் ஏற்பட்டது. துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் வாரிசுக்கு முன்பு கிடைக்கவில்லை. வெறும் 400 தியேட்டர்களுக்கும் குறைவாகவே வாரிசுக்கு ஒதுக்கப்படும் சூழல் இருந்தது.

வாரிசு டீம் அதிருப்தி

இதனால் பெரும் அப்செட்டில் வாரிசு படக்குழு இருந்தது. வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு கொடுத்தால் மட்டுமே துணிவுக்கு நிகரான தியேட்டர்கள் வாரிசுக்கு கிடைக்கும் என்ற இக்கட்டான சூழலில் சிக்கிக் கொண்டது வாரிசு. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினிடம் நேரடியாகவே பேச இருப்பதாக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ அண்மையில் பேசியிருந்தார்.

வாரிசு டீல் ஓகே

இந்நிலையில், மறைமுக பேச்சுவார்த்தையில் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கும், வாரிசு படக்குழுவுக்கும் டீல் ஓகே செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாரிசு படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிடுகிறது. ஏரியா வாரியாக பார்க்கும்போது, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் ஸ்ரீசாய் கம்பைன்ஸ் வெளியிடுகிறது. மதுரையில் பைவ் ஸ்டார் பிலிம்ஸ் வாரிசு படத்தை வெளியிடுகிறது. சென்னை நகரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.