துவரங்குறிச்சி அருகே மர்ம விலங்கு கடித்து 35 ஆடுகள் பலி

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா கொடும்பபட்டியை சேர்ந்தவர் கருப்பன் (57). விவசாயி. இவர் ஆடு, கோழி வளர்த்து வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் ஆடுகள் மற்றும் கோழிகளை அடைத்துவிட்டு வீட்டில் தூங்கினர். நேற்று அதிகாலை ஆடுகள் அலறல் சத்தம் கேட்டதால் கருப்பன் எழுந்து வந்து பார்த்தார். அப்போது 3 சினை ஆடுகள் உள்பட 35 ஆடுகள், 10 கோழிகள் கடித்து குதறப்பட்டு இறந்து கிடந்தன.  

மர்ம விலங்குகள் கடித்து குதறி ஆடு, கோழிகள் பலியானது தெரியவந்தது. தகவலறிந்து மருங்காபுரி தாசில்தார் செல்வம் விரைந்து வந்து ஆடுகளை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வர வழைக்கப்பட்டு ஆய்வுக்கு பின் ஆடுகள் அனைத்தும் புதைக்கப்பட்டன. ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு எது என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.