உடனே தயாராகுங்கள் – அமைச்சரான பின் உதயநிதியின் முதல் பேச்சு

உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அமைச்சர் பதவி ஏற்றதும், உதயநிதி ஸ்டாலின் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்பிறகு முதல்முறையாக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான ஏகலைவா உண்டு உறைவிட பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்க செல்லும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆவடியில் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் 100 பெண்களுக்கு தையல் எந்திரம், 20 கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், 30 கால்பந்து வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் 41 சிலம்ப வீரர்களுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர்,“எத்தனையோ பதவிகள் அல்ல பொறுப்புகள் வரலாம் போகலாம். ஆனால் தங்களின் செல்லப்பிள்ளையாகத்தான் நான் இருப்பேன். தற்போது அமைச்சராக இருப்பதால் இருக்கும் பணிகளை சரியாக செய்ய வேண்டிய கடமை உள்ளது. வருகிற மக்களவைத் தேர்தலுக்கு இப்போதிருந்தே நாம் பரப்பரையை தொடங்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும். அதனால் இப்போதே தேர்தலுக்கு  தயாராகுங்கள். ஆவடியில் விளையாட்டு மைதானம் வேண்டும் என்று அமைச்சர் நாசர் கோரிக்கை விடுத்தார். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் அணி உறுப்பினர்கள் அமைச்சர் நாசரை பின்பற்றி கட்சியில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய பெயரில் ஊரை சேர்த்துக்கொள்ள அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் ஆவடியை தனது பெயருக்கு முன்னாள் வைத்துக்கொள்ள கூடிய தகுதி அமைச்சர் நாசருக்கு உண்டு. பேராசிரியர் அன்பழகன் திராவிடத்தின் கருவூலம். என்னுடைய திருமணமும் பேராசிரியர் தலைமையில்தான் நடைபெற்றது.

இனமான பேராசிரியரின் கீழ் படித்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். தற்போது திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் தலைவர் ஸ்டாலினும் அவரிடம் படித்தவர்தான். கலைஞருக்கு பின் ஸ்டாலின்தான் கழகத்தை வழிநடத்த போகிறார் என கலைஞர் இருக்கும் போதே கூறியவர் பேராசிரியர். 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பேராசிரியரின் உருவ சிலை அமைத்து பெயரை சூட்டியது தமிழ்நாடு அரசு. நம்பர் 1 முதலமைச்சர் என பெயர் வாங்குவது பெரிது அல்ல. நம்பர் 1 தமிழ்நாடு என பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் ஆசை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.