குவாலியர், மத்திய பிரதேசத்தில், நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண், சமீபத்தில் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு, நான்கு கால்கள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.இந்த குழந்தையை பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் ஆர்.கே.எஸ்.தாகத் கூறுகையில், ”குழந்தை பிறக்கும்போது 2.3 கிலோ எடையுடனும், நான்கு கால்களுடனும் இருந்தது. வயிற்றில் உருவாகும் கரு இரண்டு பகுதிகளாக பிரியும் போது, இது போன்று இரண்டு கால்கள் கூடுதலாக வளர்ந்துள்ளது.
”தற்போது சிறப்பு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூடுதல் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும். இதனால் குழந்தை இயல்பாக வாழ முடியும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement