கடவுளை கல்யாணம் பண்ணிக்கிட்ட இளம்பெண்: ராஜஸ்தானில் நூதனம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இளம்பெண் ஒருவர் மணமகன் இன்றி, கடவுளை திருமணம் செய்து கொண்ட விநோத சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த கோவிந்த்கருக்கு அருகில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த பூஜா சிங் (30) என்ற இளம்பெண்,  அங்குள்ள கிருஷ்ணன் கோயிலில் கடந்த 8ம் தேதி திருமணம் செய்து கொண்டார். மணமகன் கிடையாது; தான் கடவுளை (தாக்கூர்ஜி) திருமணம் செய்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது இந்த விநோதமான திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ‘நான் திருமணம் செய்து கொள்ள விருப்பமின்றி இருந்தேன். ஆனால் எனது கிராம மக்கள் எனது தனிமை வாழ்க்கை குறித்து பலவாறாக பேசி வந்தனர். அவர்களின் அவதூறு பேச்சுகளுக்கு முடிவு கட்டுவதற்காக, கோயிலில் அமர்ந்து தாக்கூர்ஜியை என் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டேன்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.